×

ஏடிஎம் அறை கதவு உடைக்கப்பட்டதாக காவல்துறைக்கு வந்த மர்ம போன்

நெல்லிக்குப்பம், மே 4: நெல்லிக்குப்பம் அடுத்த பாலூரில் தேசிய வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் வெளியில் வங்கி ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டி.எம். கதவுகள் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் உள்ளதாக நேற்று காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போன் வந்தது. இதுகுறித்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து நடுவீரப்பட்டு சப் -இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏ.டி.எம். இயந்திரம் உள்ள அறையை ஆய்வு செய்தனர். பின்பு வங்கி மேலாளர் கோபி சங்கருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த மேலாளர் மற்றும் போலீசார் ஏ.டி.எம். இயந்திரத்தை ஆய்வு செய்தனர். இந்த ஏ.டி.எம். இயந்திர அறையின் கதவுகள் பழுதடைந்த நிலையில் பலமாதங்களாகவே உள்ளது. ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள பணங்கள் எதுவும் திருடு போகவில்லை என தெரியவந்தது. கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம நபரின் செல்போனை மீண்டும் தொடர்பு கொண்டபோது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஏடிஎம் அறை கதவு உடைக்கப்பட்டதாக காவல்துறைக்கு வந்த மர்ம போன் appeared first on Dinakaran.

Tags : Nellikuppam ,Balur ,National Bank ,Dinakaran ,
× RELATED கள்ளச்சாராயம் விற்றவர் கைது